Tuesday 21 February 2012

மாணவர்களே..உங்கள் சிந்தனைக்கு..

அனைவருக்கும் வணக்கம்.புதிய ஆண்டு தொடங்கி விட்டது.பல திட்டங்கள், பல சிந்தனைகள்,பல அலுவல்கள், பல சவால்கள்...வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மாற்றங்கள் நம்மை வலுபெறச் செய்கின்றன.

என்னருமை மாணவர்களே..பள்ளியில் உங்களின் கடமை என்னவென்று சிறிது சிந்தியுங்கள்!உங்கள் பெற்றோரின் கனவுகளை சிறிது அலசுங்கள்!உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் பின் விளைவுகளை புரிந்து கொள்ளுங்கள்.மாணவர் பருவம் சிறிது காலமே.மற்றவர் உற்றவர் போற்றும் பண்பை உங்கள் பள்ளியில் பதித்து வையுங்கள்.உங்களின் பெயர் பள்ளி உள்ள வரை உச்சரிக்கப்படட்டும்..

இன்பமே சூழ்க!எல்லோரும் வாழ்க!

அன்புடன்,
தமிழ் ஆசிரியை.

Wednesday 17 August 2011

சிந்தனை துளிகள்


படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.


மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அதனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.


Tuesday 16 August 2011

அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றி.

இன்பமே சூழ்க, எல்லாரும் வாழ்க.வணக்கம்.

தமிழ் மொழிக் கழகம் நடத்திய பண்பாட்டு விழா மற்றும் பெற்றோருடன் ஒரு சந்திப்பு நிகழ்வு இனிதே நடந்தேறியது.ஏறக்குறைய 30 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தனர். மொத்த வருகையாளர்கள் 95 பேர்கள்.

பேச்சாளர்களான மேஜர் சேகர், திரு நாகேந்திர ராவ் மற்றும் திரு ஆனந்தகுமார் அனைவரும் மகத்தான உரையை ஆற்றினர். அவர்களின் உரை பெற்றோர்களின் மன மாற்றத்திற்கு துணை செய்தது என்பதை நிகழ்ச்சி முடிந்தவுடன் கண்கூடாக அறிந்தேன். நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்து உதவிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு வேலாயதன் அவர்களுக்கும், தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல, அந்த இறைவனின் அருளின்றி இந்நிகழ்வு இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க முடியாது.அவருக்கும் நன்றி.

நிகழ்ச்சி முடிந்தவுடன், சில பெற்றோர் நிகழ்ச்சி பிரமாதமாக இருந்தது என்று கூறினர்.சில பெற்றோர்கள் வரவில்லை.ஆராய்ந்து பார்த்ததில், பெற்றோருக்காகக் கொடுக்கப் பட்ட கடித்தை மாணவர்கள் அவர்களிடம் கொடுக்கவில்லை. பிரச்சனைக்குரிய மாணவர்களே அவ்வாறு செய்திருந்தனர்.

எது எப்படி ஆயினும், இந்நிகழ்வு பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மேல் அன்பும், அக்கறையும் கொண்டுள்ளனர் என்பதை நிருபித்து விட்டது. நம் பிள்ளைகள் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், பெற்றோர்கள் அவ்வப்போது பள்ளிக்குச் சென்று அவர்களைப் பற்றி ஆசிரியர்களிடம் விசாரிக்க வேண்டும்.இன்பமே சூழ்க,எல்லாரும் வாழ்க.

வாழ்க நம் தமிழ்மொழி;வெல்க நம் மாணவர்கள்;வளர்க நம் சமுதாயம்....ஓம் தத் சத்.

Monday 8 August 2011

பண்பாட்டு விழா மற்றும் பெற்றோர் சந்திப்பு

பள்ளியின் தமிழ்மொழிக் கழகமும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து பண்பாட்டு விழா மற்றும் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரின் பெற்றோர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.வணக்கம்.

அன்புடன்,
கழக ஆலோசகர்கள்
திருமதி உமாதேவி மாரப்பன்
திருமதி புனிதா ராஜின்ரம்

Tarikh : 14 Ogos 2011 (AHAD)
Masa : 8.00 pg
Tempat : Dewan Mutahir, SMK Tun Mutahir.


ATURCARA PROGRAM

8.00 pg Pendaftaran pelajar dan Ibu Bapa
9.00 pg Bacaan Doa
9.05 pg Ucapan Perasmian oleh Tn Hj Hussin Bin Sirun (Pengetua)
9.30 pg Bharathanatyam ( tarian klasikal)
9.45 pg Ceramah Keibu bapaan oleh Mejar Segar
10.45 pg Tarian Klasikal
11.00 pg Ibu bapa Cemerlang oleh En.Velaithan
11.45 pg Deklamasi Sajak
12.00 t/h Tarian Klasikal
12.30 t/h Pakaian Traditional (Fashion show)
1.30 t/h Bersurai





Friday 15 July 2011

                                             2012 - தான் உலகத்தின் இறுதி வருடமா ?

இந்துமத கால கணக்குப்படி நான்கு யுகங்கள் உண்டு என்று நமக்கு தெரியும்.  இதில் கிரேதா யுகத்திற்கு 17,28,000 ஆண்டுகள் உண்டு,  திரேதாயுகத்திற்கு 12,95,000 ஆண்டுகள் உண்டு,  துவாபரயுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள் உண்டு, தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு மொத்த வயது 4,32,000 ஆண்டுகள் ஆகும்.  கலியுகம் பிறந்து இப்போது 5,110 வருஷம் தான் ஆகிறது.  இன்னும் 4,26,890 வருடங்கள் முடிந்த பிறகு தான் கலியுகத்தின் ஆயுள் முடியும்.  அப்போது தான் பிரம்மாவிற்கு பகல்முடிகிறது  இரவு வரும். அதாவது பிரம்மாவின் இரவு என்பது உலகத்தின் அழிவு அல்லது செயல்படாத நிலை என்பதாகும்.  அதனால் அதுவரை இயற்கை நியதிப்படி உலகம் அழியாது,  நாமாக அணுகுண்டை போட்டு கொண்டால் தான் உண்டு அதற்கு இயற்கையும்,  இறைவனும் பொறுப்பு ஏற்க முடியாது.